குறுந்தொகை - 2
- பாடியவர் - இறையனார்
- திணை : குறிஞ்சி
- துறை : இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.
- வரலாறு : செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இறைவன் தருமி மூலம் கொடுத்தனுப்பிய பாடல்.
பாடல் :
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
பொருள் :
பூக்களிடையே காணப்படுகின்ற மகர்ந்த மணிகளை ஆராய்ச்சி செய்கின்ற அழகிய சிறையையும் உடைய வண்டே! என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல் நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக; நீண்ட நாட்களாக பழகி நெருக்கமான நட்பையும், மயில் போன்ற அழகிய சாயலையும் கொண்ட நெருங்கிய பற்களையும் உடைய என் தலைவியின் கூந்தலைப் போல நீ அறியும் மலர்களுள் நறுமண முடைய பூக்கள் ஏதும் உள்ளனவோ?
கருத்து : தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது.